|
சக
ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறைந்தாலும், பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையால்
வேலைகளை முடித்து நல்ல பெயரைப் பெறுவர். பெண்கள் தன்னம்பிக்கையுடனும்,
தைரியத்துடனும் பிரச்னைகளை கையாளுவார்கள். ஏனோ தானோ வென்று செயல்படும் ஊழியர்களை
வியாபாரிகள் இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். வழக்கு சம்பந்தமான
விவகாரங்களில் தகுந்த ஆலோசனையை பெற்று முடிவெடுத்தால், நஷ்டமிராது. கலைஞர்கள்
தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலுபவர்களை இனங்கண்டு ஒதுக்கி விட்டால்,
வாழ்க்கை மகிழ்வாக அமையும்.
|