நந்தன வருட புத்தாண்டுப் பலன்கள் 2012 ஜோதிட சுடர், ஜோதிட ரத்னா
ஜி எஸ் வாசன்
jothidaseithi@gmail.com
Ph : 9444101786


 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்.

நந்தன ஆண்டில் உழைப்புக்கேற்ற பலனை நீங்கள் அடைவீர்கள், உங்கள் ராசியாதிபதி குருபகவான் மே மாதம் முதல் ராசிக்கு 6-ல் மறைகிறார். மறைந்த குரு நிறைந்து தருவார் என்றாலும். அவ்வப்போது பணத்தேவை உண்டாகக் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அடுத்தவர்களுக்காக ஜாமீன் கொடுப்பது, பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது தேவையற்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தொழில் வியாபார போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் பணிகளில் ஈடுபடுவது நன்மை தரும். குறிக்கோள் இல்லாமல் செயல்பட வேண்டிய சூழ்நிலை வரலாம். குருபார்வையின் பலன் குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகள் குறையும். சுபச்செலவுகள் உண்டாகும். நீண்ட தூரத்தில் இருந்து வரவேண்டியத்தகவல்கள் சாதகமாக இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திட்டங்கள் செயல்படுத்த தேவையான உதவிகள் கிடைக்கும்.

2012 மே மாதம் முதல் ஜூலை வரை சனி பகவான் வக்கிரமடைவதால் அந்த காலக்கட்டத்தில் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரமுள்ள பதவிகளில் இருப்பவர்களினால் கெடுபிடி இருக்கக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிவரும். பிற்க்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.

2012 டிசம்பரில் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். சிக்கலான விஷயத்தில் கூட தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள், பிள்கள் நலனில் அக்கறை காட்டவேண்டி வரும். அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுிபடவேண்டி வரும்.

மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி பாடங்கலை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வீண் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்குவது நல்லது. கலைத்துறையினர் வாப்பபைத் தேடி அலைய வேண்டி வரும். அரசியலில் இருப்பவர்கள் பெயரும் புகழும் அடைய பாடுபடவேண்டி வரும். விவசாயிகள் எதரிபார்த்த விளைச்சல் குறையலாம் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: குரு பகவானை வியாழக்கிழமை நெய் தீபம் ஏற்றி ,கொண்டக்கடலை சுண்டல் நைவேதியம் செயது வணங்க வாழ்க்கை வளம் பெறும்.

முன் செல்ல

 

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.