சேவற்கொடி

 சேவற்கொடி

சென்னை, மார்ச் 9 (டிஎனஎஸ்) ராதா மோகனிடம் இணை இயக்குநராகவும், அபியும் நானும் படத்தின் வசனகர்த்தாவுமான சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் முதல் படம்.

திருச்செந்தூரில் சொந்தமாக பேன்ஸி ஸ்டோ ர் வைத்திருக்கும் அருண் பாலாஜிக்கு, மற்றப் பசங்களைப் போலவே நாயமி பாமாவை பார்த்ததும் அவர் மீது காதல் ஏற்படுகிறது. தன் காதலை வளர்க்க பாமாவை தேடி அலையும் அருண் பாலாஜி ஒரு வழியாக பாமாவை கண்டுபிடித்து தனது காதலிலும் வெற்றி பெற்று விடுகிறார்.

கதையின் மற்றொரு ஏரியாவில் அதே திருச்செந்தூரில் மீனவ கிராமத்தில் மீன் வேனின் டிரைவராக பணியாற்றும் பவன், தனது தங்கையை தனது முதாலாளிக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுக்க முயல்கிறார். இதற்காக அவர் ஓட்டும் வேனையே அவருடைய முதலாளி பரிசாக கொடுக்கிறார்.

இதற்கிடையில் பவனின் தங்கை தான் காதலித்தவனுடன் ஓடிவிடுகிறார். இதனால் பவனுக்கு முதலாளி கொடுத்த வேன் பறிக்கப்படுகிறது. வேன் போன சோகத்தில் இருக்கும் பவன், தனது தங்கை காதலுடனுடன் சென்றதற்கு அருண் பாலாஜி தான் காரணம் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். இதனால் தனது வேனை வைத்து அருண்பாலாஜியின் பைக்கில் மோத அந்த விபத்தில் அருண்பாலாஜியின் அம்மா இறந்துப் போகிறார். இதை விபத்து என்று நினைத்துகொண்டிருக்கும் அருண்பாலாஜிக்கு ஆறு மாதம் கழித்து இது திட்டம் போட்டு நடத்தப்பட்டது என்பதை பவன் மூலமாகவே தெரிந்துகொள்ளும் அருண்பாலாஜி, பவனை அவருடைய கிராமத்திலே அடித்து துவைக்கிறார். இந்த சண்டையில் பவன் அணிந்திருந்த சட்டை, லுங்கி மட்டுமிலாமல் ஜட்டி முதல் கொண்டு கிழிந்துபோக, நிர்வாணமான கோலத்தில் கிராம மக்களின் முன் அவமானப் படுகிறார் பவன். இதனால் அருண்பாலாஜியை பழிவாங்குவதற்காக பவன் அலைய, இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

குற்றாலீசுவரனின் நீச்சல் சாதனையை முறியடித்து, முன்னணி நீச்சல் வீரராக திகழும் அருண்பாலாஜி பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறார். தலைமுடியில் மட்டும் ஏதோ துரு பிடித்ததுப் போல ஒரு செம்பட்டை கலர் அவருக்கும், அவர் கதாபாத்திரத்திற்கு ஒட்டாத ஒன்றாக இருக்கிறது. சண்டைக்காட்சி, ஆக்ரோஷமான எக்ஸ்பிரஷன் என்று கொடுத்த வேலை சரியாக செய்திருக்கிறார்.

ஹோம்லி லுக்குடன் சின்ன எக்ஸ்பிரஷன்களில் மனசை அள்ளுகிறார் நாயகி பாமா. நடிப்பத்ற்கு பெரிதாக ஒன்றுமில்லையென்றாலும். வந்த காட்சிகளில் வஞ்சனை இல்லாமல் திரையை நிறப்பிவிட்டு செல்கிறார்.

எங்கேயும் எப்போதும் சத்யாவின் இசையில் 'கம்பி மத்தாப்பு' பாடல் இத்த ஆண்டு சூப்பர் ஹிட் பாடல் என்று சொல்லலாம். மற்ற பாடல்கள் ஓகே ரகம் தான். பாடல்கள் அனைத்துமே வைரமுத்து எழுதியிருக்கிறார்.

பி.செல்லதுரை, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தார் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். லைட்டிங், லொக்கேஷன் என ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் ரசிகர்களை உச்சாகமடைய செய்த இயக்குநர் இரண்டாம் பாதியில் சிறிது சோர்வடைய செய்கிறார். அருண்பாலாஜி, பவன் இருவருக்குமிடையே உள்ள பகையை வைத்து காட்சிகளை நகர்த்திய இயக்குநர் தீடீரென்று இரண்டு அண்ணாச்சிகளை புகுத்தி காமெடி செய்துவிட்டார். (காமெடி நடிகர்கள் இல்லாத குறையை தீர்ப்பதற்காக இப்படி செய்தாரோ என்னவோ)

மற்றபடி நடிகர்களிடம் இயல்பான நடிப்பை வாங்குவது, பாடல் காட்சிகளை படமாக்கிய விதம், சாதாரண லொக்கேஷன்களை கூட கவனிக்க வைத்த விதம் என இயக்குநர் சுப்பிரமணியன் அப்ளாஸ் வாங்குகிறார்.

இரண்டரை மணி நேரம் படத்தை இழுக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காட்சிகளை வைத்து ரொம்ப போரடிக்காமல், சொல்ல வந்ததை மட்டும் சொல்லிருப்பதால் சேவற்கொடியை ஒரு முறை பார்க்கலாம். (2 மணி நேரம் படம் தான்)

ஜெ.சுகுமார்

Mar 09, 2012

Comments


Lakhdar
Always the best cotnnet from these prodigious writers.
04 May 2012 03:32 AM




Security Code
 
* Do not use semicolon(;)

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.