அர்ஜூன் கட்டிவரும் ஆஞ்சநேயர் கோவில் சிலை பிரதிஷ்ட்டம் செய்யப்பட்டது

 
 அர்ஜூன் கட்டிவரும் ஆஞ்சநேயர் கோவில் சிலை பிரதிஷ்ட்டம் செய்யப்பட்டது

சென்னை, ஏப்.07 (டிஎன்எஸ்)ஆஞ்சநேயர் பக்தரான நடிகர் அர்ஜூன், சென்னை கெருகம்பாக்கத்தில் பிராமாண்டமான ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வருகிறார். இந்த கோவிலில் சுமார் 35 அடி உயரமும், ஏறக்குறைய 140 டன் எடையும் கொண்ட பீடத்துடன் கூடிய ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 07) காலை 8 மணிக்கு இந்த பிராமாண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பிரதிஷ்ட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

தியான நிலையில் அமர்ந்தப்டி உள்ள ஆஞ்சநேயர் சிலை உலகிலேயே முதல் முறையாக இங்குதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 100 தொழிலாளர்கள் சேர்ந்து இந்த சிலையை பொருத்தினார்கள். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை, கூடியிருந்த பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று நடிகர் அர்ஜூன் தெரிவித்தார். (டிஎன்எஸ்)

Apr 07, 2012

Comments


saravanan
good jub wellcome
20 Apr 2012 03:44 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் வெள்ளி திரை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.