திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த பெண் பக்தர்    |    வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அறிவிப்பு    |    சரக்கு லாரிகளில் திருட்டு : தேமுதிக பிரமுகர் கைது    |    ரஞ்சி போட்டி : மகாராஷ்டிர வீரரை பந்து தாக்கியது    |    பிரதமர்களில் வாய்பாய் தான் மிகச் சிறந்தவர் : அத்வானி    |    கே.பாலச்சந்தர் மறைவு : சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் இரங்கல்    |    வங்காள தேச முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை    |    தமிழர்களின் வாக்குகளுக்காக புதிய போர்க்குற்ற விசாரணை நடத்த ராஜபக்சே முடிவு    |    பாலச்சந்தர் மறைவையொட்டி இன்று திரைப்பட பணிகள் ரத்து    |    'கத்தி' படத்திற்கு எதிராக வழக்கு - நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்    |    குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் கார்டை புதுப்பிக்கலாம்    |    வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை    |    பாலச்சந்தர் பெயரில் விருதுகள் அறிவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை    |    பரமாரிப்பு பணிக்காக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்    |    கே.பாலசந்தர் மறைவு : ஜெயலலிதா இரங்கல்                                                 

நடிகர் திலீப் மரணம்

மைசூர், மே 25 (டிஎன்எஸ்) நடிகர் திலீப் இன்று (மே 25) காலமானார். அவருக்கு வயது 52.

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார்.

பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை, சம்சாரம் அது மின்சாரம் போன்ற  படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். நேற்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.

திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். (டிஎன்எஸ்)

Published On : May 25, 2012
மேலும் வெள்ளி திரை செய்திகள்


© Copyright 2014,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.