மன்சூரலிகான் ஹீரோவாக நடிக்கும் 'லொல்லு தாதா பராக் பராக்'

 
 மன்சூரலிகான் ஹீரோவாக நடிக்கும் 'லொல்லு தாதா பராக் பராக்'

சென்னை, ஏப்.12 (டிஎன்எஸ்) புவியரசி சினி பிளானர் வழங்கும் ராஜ்மென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தினர், இந்தியில் புதுமுகங்கள் நடித்து வெற்றி பெற்ற 'குல்லு தாதா' என்ற படத்தை தமிழில் 'லொல்லு தாதா பராக் பராக்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இதில் ஹீரோவாக மன்சூரலிகான் நடிக்கிறார். ஹீரோயினாக ஷில்பா நடிக்கிறார்.

இப்படத்தில் மன்சூரலிகான் ஹீரோவாக நடிப்பதுடன் இப்படத்திற்கு இசையமைத்து, பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடியாக பணம் வசூலிக்கும் மன்சூரலிகான், "நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன். ஒழுங்கா பணம் கட்டினா ஒஸ்தியா வாழ்வே...இல்லாட்டி நாஸ்தியா போயிடுவே" என்று அடிக்கடி உச்சரித்துகொண்டு கந்துவட்டி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் கிருஷ்ணமூர்த்தி, போண்டாமணி, வெங்கல் ராவ், வெ.ஆ.மூர்த்தி, நெல்லை சிவா, பாண்டு உள்ளிட்ட பெரிய காமெடி பட்டாளமே நடிக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வியாசன் இயக்குகிறார். ஒளிப்பதிவு ரவிசீனிவாஸ், நடனம் விஜயலட்சுமி, வாசு, சண்டைப்பயிற்சி நித்யானந்தம், தயாரிப்பு நிர்வாகம் ஷெரீப் அகமது.

இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர், ஏலகிரி போன்ற படங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (டிஎன்எஸ்)

Apr 12, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் வெள்ளி திரை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.