தானே புயல்: ஜெயலலிதா அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

 

சென்னை, பிப்.5 (டிஎன்எஸ்) கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 790 கோடி செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன் ரூ.790 கோடி செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

துயரத்தில் வாடும் உழவர்களுக்கு உதவும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரவேற்கத்தக்கது. தானே புயலால் பலா மற்றும் முந்திரி மரங்கள் அழிந்ததால் அதை நம்பியிருந்த உழவர்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்து விட்டன. எனவே, அவர்கள் முந்திரி மற்றும் பலா மரங்களை நட்டு அவை மீண்டும் பயன்தர தொடங்கும் வரை அவர்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட உதவிகளையும் பராமரிப்பு செலவையும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

இந்த நிலையில் முந்திரி, பலா போன்ற தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் உழவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும். விழுந்த மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்படி உதவி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். ஆண்டு தோறும் உரங்கள், உயிர் உரங்கள், தாவரப் பூச்சிக் கொல்லிகள் போன்றவை வழங்கப்படும், பாசன வசதிகள் செய்து தரப்படும் என பல உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதிர்காலமே இருண்டு போய்விட்டதாக கருதி சோகத்தில் வாடும் உழவர்களுக்கு ஓரளவாவது வெளிச்சத்தை காட்ட தமிழக அரசின் இந்த நடவடிக்கை உதவும்.

அதேபோல் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து உழவர்கள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும், உழவர்கள் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தும் காலம் அதிகரிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைத்தான். முந்திரி, பலா சாகுபடி செய்யும் உழவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செலவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, அப்பயிர்கள் முழுமையாக பயன்தரத் தொடங்கும் வரை பராமரிப்பு செலவை வழங்க முன்வரவேண்டும்.

அதேபோல் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற கடனின் அளவு ரூ.440 கோடி என்று முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். தானே புயல் இடர் உதவிக்காக இதுவரை சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கூடுதலாக ரூ.440 கோடி பயிர்க்கடனையும் ரத்து செய்தால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்பட்டு விடாது. எனவே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உழவர்கள் பெற்ற பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)

Feb 05, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.