
சென்னை, மார்ச் 2 (டிஎன்எஸ்) பெருமை மிக்க, பிரமாண்ட நிகழ்ச்சி என்று விஜய் டிவியால் சொல்லப்படும் விஜய் டிவி நிகழ்ச்சி, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. தமிழ் சினிமாவில் தற்போது உள்ள வசூல் நாயகனான சூர்யா இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் கேள்விகளை கேட்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் விளம்பரங்களைப் பார்த்த மக்கள் மிகவும் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக எதிர்பார்த்துகொண்டிருக்க, பிப்.27ஆம் தேதி முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக துவங்கியது. ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த மக்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததும் கோபமடைந்தாலும், வயிறு வலிக்க சிரித்துகொண்டிருக்கவும் வைத்திருக்கிறது இந்த நிகழ்ச்ச்சி.
இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் கேற்கப்படும் கேள்விகள் தான். திருமணமாகி வரும் முதல் தீபாவளியை என்ன தீபாவளி என்று அழைப்பார்கள்? A. கால் தீபாவளி B.மூக்கு தீபாவளி C.தலை தீபாவளி என்று இதுபோல பல காமெடி கேள்விகளை ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கேட்கப்படுகிறது. சில சமயங்களில் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கே குபீர் சிரிப்பை ஏற்படுத்தி விடுகிறது இந்த கேள்விகள். அதிலும் அந்த கேள்விகளை ரொம்பவே சீரியஸாக சூர்யா கேட்கும்போது சொல்லவே வேண்டாம், வடிவேலுவின் பத்து காமெடி காட்சிகளை பார்த்தது போல இருக்கிறது.
இப்படி மக்களை சிரிப்பு காட்டினாலும், இதெல்லாம் மக்களை ஏமாற்றி சுரண்டுவதற்காகத்தான் என்பதை சிலர் அறிந்தும், பலர் அறியாமலும் இருப்பதுதான் சோகமாக இருக்கிறது.
எது எப்படியோ சிங்கம் சூர்யாவை வைத்து ஒரு சிரிப்பு நிகழ்ச்சியை கொடுத்திருக்கிறது விஜய் டிவி. (டிஎன்எஸ்)
Mar 02, 2012
* Do not use semicolon(;)