மெரீனா‌வி‌ல் கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையாடினா‌ல் கைது

 
 மெரீனா‌வி‌ல் கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையாடினா‌ல் கைது

சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
 
சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை பகுதியில் ஆயுதபடை‌யின‌ர் குவிக்கப்பட்டு‌‌ள்ளன‌ர்.

சென்னை மெரீனா கடற்கரையின் உள்ளே வாகனங்கள் செல்வதற்காக போடப்பட்டிருந்த சாலையில் மாணவர்களும், இளைஞர்களும் விடுமுறை தினங்களில் கிரிக்கெட் விளையாடி வந்தார்கள். இதற்கு வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட தடை விதித்து காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

இன்று ‌விடுமுறை நா‌ள் என்பதால் மாணவர்களும், வாலிபர்களும் கிரிக்கெட் விளையாட வருவார்கள் என எதிர்ப்பார்த்து ஆயுதப்படை காவல‌ர்க‌ள் குவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனால் பலத்த மழை பெ‌ய்து வருவதால் கிரிக்கெட் விளையாட யாரு‌ம் வரவில்லை.

இது குறித்து சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் மவுரியா கூறுகை‌யி‌ல், ''சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கிரிக்கெட் விளையாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரீனா கடற்கரை பகுதியில் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டுள்ளன‌ர். ஆனால் இன்று மழை காரணமாக யாரும் கிரிக்கெட் விளையாட வரவில்லை'' எ‌ன்றா‌ர்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments


V. Ramaswamy, Singapore
Let this kind of Directives be not restricted only to Chennai. It should extend all over Tamilnadu. Also similar directives like Spitting in public places, throwing garbage anywhere and everywhere, damaging public properties, etc. should also be declared as offences punishable under law and strictly implemented. There will be dramatic positive changes.
08 Nov 2009 07:27 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 KATAKAKATAKA : A good day . So be more self-assertive than usual, otherwise people may tak...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.