யாஹு நிறுவனம் 2000 பணியாட்களை நீக்க முடிவு

 

கலிபோர்னியா, ஏப்.6 (டிஎன்எஸ்) யாஹு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள ஸ்காட் தாம்ஸன் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், கூகுள், பேஸ்புக் போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் யாஜு நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக ஸ்காட் தெரிவித்தார்.

எனவே பணியாட்களை குறைப்பதன் மூலம் சிக்கன நடவடிக்கைகளை ஸ்காட் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு கடந்த 2011ல் யாஹுவில் 14 ஆயிரம் பணியாளர்கள் இருந்தனர். இப்போது இவர்களில் 2 ஆயிரம் பேரை நீக்குவதன் மூலம் ஆண்டுக்கு 375 மில்லியன் டாலர்களை சேமிக்கவும் வரிகள் மூலம் 45 மில்லியன் டாலர்கள் வரை சேமிக்கவும் யாஹு முடிவு செய்துள்ளது. (டிஎன்எஸ்)

Apr 06, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் வணிகம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.