பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தேர்வு நடத்தினால் ரூ.50000 அபராதம் - தமிழக அரசு அதிரடி

 

சென்னை, பிப்.17 (டிஎன்எஸ்) மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த கல்விச் சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக நிறைவேற்றி வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சட்ட விதிகளை மீறினால் விதிக்கப்படும் தண்டனை குறித்து தெரிவித்துள்ளது.
 
அதன் விவரம் வருமாறு; மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தனியார் பள்ளிகள் தேர்வு எதையும் நடத்தக்கூடாது. இந்த விதியை முதல் முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எந்த குழந்தையையும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ, கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் வரையிலோ பள்ளியில் சேர்க்கலாம். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். வயது சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு அனுமதி மறுக்கக்கூடாது.
 
தனியார் பள்ளிகளுக்கு அருகாமை பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவித இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் வகுப்பிலோ அளிக்க வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.
 
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கான பள்ளி கட்டணத்தை உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர், ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
 
இந்த அலுவலர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான செலவீனத்தை கணக்கிட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவினத்தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த பள்ளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, இதில் எது குறைவோ அதை வழங்க வேண்டும்.
 
செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 2 தவணைகளாக இந்த தொகை அரசிடமிருந்து வழங்கப்படும். இந்த ஒதுக் கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஜுலை மாதத்தில் அதிகாரிகளுக்கு பள்ளிகள் அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

Feb 17, 2012

Comments


Natacha
There are no words to dsceribe how bodacious this is.
03 May 2012 10:28 PM

SELVAM
Good job TN Govt. Keep it up.
17 Feb 2012 02:54 PM

boobika
its really acceptable one, But one main thing, is its will happen soon then only that problem arose from that schools could be get some solution .
17 Feb 2012 02:20 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.