திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி தரிசனம்: தேவஸ்தான விதிகளை மீறியதாக சர்ச்சை

 

திருப்பதி, மே.2 (டிஎன்எஸ்) திருப்பதி  தேவஸ்தான விதிமுறைகளை மீறி ஜெகன்மோகன் ரெட்டி தரிசனம் செய்ததாக ஆந்திராவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தில் இன்று  (மே 2) சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் தவிர, மற்ற மதத்தவர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டுமானால் அங்குள்ள அறிவிப்பு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.  
 
ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான ஜெகன்மோகன், தேவஸ்தானத்தின் இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் நேராக சென்று சாமி தரிசனம் செய்தார். இவ்வாறு விதிமுறைகளை மீறி ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் தரிசனம் செய்த விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 
ஜெகன்மோகன் கடந்த 2009ம் ஆண்டு திருப்பதி சென்றபோது, நடைமுறைப்படி கையெழுத்திட்டுள்ளார் எனவும், எனவே எல்லா முறையும் கையெழுத்திட தேவையில்லை எனவும் ஜெகன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் சோனியா காந்தி போன்ற தலைவர்கள் கூட ஒவ்வொரு முறையும் திருப்பதியில் கையெழுத்திட்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். 
 
இந்நிலையில் ஜெகன்மோகன் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்ரமணியம் கூறியுள்ளார். (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.