சங்கரன்கோவில் தொகுதி: திமுக வேட்பாளர் சொத்து விபரம்

 

நெல்லை, பிப்.28 (டிஎன்எஸ்) சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் நேற்று (பிப்.27) வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு ரூ.27,24,966 மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையும் சொத்து ரூ.5,24,966, நிலம் உள்ளிட்ட அசையா சொத்துமதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
 
இவரது பெயரில் வங்கிக் கடன் ரூ.1,54,500 உள்ளது. மேலும் இவரது மனைவி வாசுகியின் பெயரில் அசையும் சொத்தாக ரூ.22,78,741 உள்ளது. இவர் மீது வங்கிக் கடன் ரூ.2.76 லட்சம் உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜவகர் சூரியகுமார் மீது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விவரமும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொய்யான ஆவணம் தயார் செய்ததாகவும், அதன்மூலம் அடமானம் மற்றும்  அதிகார ஆவணம் கொடுத்து சுய லாபம் அடைந்ததாகவும் உள்ள குற்றம் (வழக்கு பிரிவுகள் ஐ.பி.சி. 465,467, 468, 471, 420, 120 (பி இவர் மீது 25.8.2008-ல் சுமத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)

Feb 28, 2012

Comments


iyappan
aalum katchiya iruntha entha poi venumalum sumathuvingala.
28 Feb 2012 12:15 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.