சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நவம்பர் 8ஆம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
கிடைக்காதவர்களில் தேசிய திறனாய்வு திறனுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும். தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் முதன்மை கல்வி அதிகாரியிடம் தொடர்பு கொள்ளலாம்.
அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)