ரூ.12 கோடி அகதிகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவராது: விஜயகாந்த்

 
 ரூ.12 கோடி அகதிகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவராது: விஜயகாந்த்

சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு தமிழக அரசு செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ள ரூ.12 கோடி, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் இடர் களைந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதே இலங்கை தமிழ் அகதிகளின் முகாம்களுக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் தெரிவித்த குறைபாடுகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

மேலும் 12.2.2009 அன்று இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி, வேட்டி, சேலை போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு வழங்கவேண்டுமென்று தே.மு.தி.க தோழர்களைக் கேட்டுக்கொண்டேன்.

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் அடைபட்டுள்ளனர். தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்க தாசில்தாரைக்கூட அணுக முடியாமல் தவித்த அகதிகள், இன்று தி.மு.க. அமைச்சர்களையே அதிகாரிகளின் பரிவாரங்களோடு சந்திக்கின்றனர். ஏதோ இப்பொழுதாவது இந்த அகதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே என்பதில் நம்மைப் போன்றவர்கள் திருப்தியடையலாம்.

ஆனாலும் இந்த முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு இந்த அரசு செலவழிக்கப்போவதாக அறிவித்துள்ளது வெறும் ரூ.12 கோடி தான். இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியும், உயர்தரக் கல்வியும், வருமானம் தரத்தக்க வேலைவாய்ப்பும், அவர்களும் மற்றவர்களைப் போல் தொழில் செய்ய வசதியும் ஏற்படுத்தி தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகள் எல்லா வசதிகளையும் பெற்று நன்றாகப் படித்து, உத்தியோகங்களிலும், வணிகம் மற்றும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் இன்றும் அவர்களின் நெஞ்சை நெக்குருகச் செய்கிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இப்பொழுதாவது விடிவு காலம் பிறக்கும் என்றால் நமக்கு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments


A.Rajasingam
There is some truth in what actor Vijayakanth says. The allocation of 12 crores of Rupees to Tamil refugees in Tamil Nadu and the visits of the Ministers, besides India's loan of 500 crores of Rupees to Sri Lanka for rehabilitation of IDPs, are greatly appreciated. But on the other hand, how long can Sri Lanka government be trusted when Indian fishermen have been constantly attacked and arrested, and Tamils in Sri Lanka are subjected to endless harassment and torture. Majority of them were persecuted without any inquiry. The sugar-coated Terrorism Act and the Emergency Regulations have only lend support to the racist concept of lebensraum adapted by Sri Lanka. There is no transparency. On examining the expansion of the Sinhalazation, right from the beginning of the colonization of Minneriya-Kantalai area, followed by the Srima-Sastri Pact (by which more than 600,000 Tamils of Indian origin were deported to India) and allowing Kachchativu to Sri Lanka and eventually with the battle at the Vanni, the whole episode appears that the ethnic cleansing was a systemmatic and calculated act and the final solution of waging a war was a blueprint for the genocide of Tamils. What was surprising that the genocide of Tamils was further established by the denial of access of the international NGOs and the journalists to the internment camps where the internally displaced persons were confined, and more especially the ICRC which is one of the tools of the UN. Sri Lanka is encouraged to take this decision because of China's assistance which should be viewed as a challenge thrown to the operation of the UN. The vital issue is whether the Indian assistance to Sri Lanka Tamils will pave way for Tamils to live with honour and dignity as in a Federal State, and defeat the racist concept of lebensraum which paves way for the rising power of China to account as a New Asian Order and whether it would have any impact on the balance of power in Asia. These Tamil refugees are displaced persons who have crossed an international border on account of political persecution. While being in Tamil Nadu camps for years, surely some of them would have married the Indian citizens and settled. One should be grateful to India for giving international protection to such refugees who crossed the international border of a country without its permission. Since the number of the Tamil refugees had exceeded a considerable number, it may be described as a population transfer. History has shown that population transfer took place from time to time throughout the world on account of political turmoil especially after the 1st and the 2nd world war. The confinement of the IDPs in internment camps promotes a feeling and fear of marginalization and a fear of domination, at a time when journalists and NGOs are denied access, all of which raises that ethnicity becomes a dominant issue. This was something similar to the confinement of Germans in concentration camps after the 1st World War. China maintains silence on this dominant issue and even failed to pronounce the solution of Federalism, because its priority is to strength its superior power surrounding India in the Indian Ocean. The vital issue is whether the racist concept of lebensraum advocated by Sri Lanka paved way for the rising power of China to account as a New Asian Order and whether it would have any impact on the balance of power at a time when the Western Powers are concerned that Sri Lanka might slip from them to China. Against such a back ground, will India's spending of such huge sum of money, find a solution to end the threat to Indian fishermen's life when they have a right to fishing around Kachchativu., and whether the legitimate aspirations of the Tamils in Sri Lanka be achieved in conformity with the Indo-Sri Lanka Peace Accord. Consider the advantages of annexing the North East Provinces and forming as a Union territory of India, which has the force of the in flow of millions of dollars that are required for development, the construction and preservation of Ram bridge between Rameswaram and Talai-Mannar which is certain to stimulate further millions of dollars annually, check mating China's encroachment and strengthening India's security and enhancing its supremacy in the Indian Ocean and above all strengthening the friendship with the Western democracies. A comparison of the situation in Europe would reveal that the appreciating factor of the western democratic countries in respecting the human rights was seen after the First World War by the creation of new Nations such as Poland, Czechoslovakia, Yugoslavia. Recently the status of Kosova is a reminder to the Asian countries about the clumsy handling of the Tamil ethnic issue in Sri Lanka. Mention should be made of the European Union Rule of Law Mission in Kosova, which is a planned deployment of European Union Police. Therefore, will it not be better if a plebiscite is held in North East Province of Sri Lanka to find out the legitimate aspirations of the Tamils. I think it is time to reconsider its decision in the best interests of India. Further, if an Asian Union is to be formed along with the Asian democratic countries in the near future, the annexation of the North East Province should be a stepping stone, as there is already a hot signal that Sri Lanka is on its course of leaning towards communist China.
06 Nov 2009 12:22 AM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 KUMBHAKUMBHA : A day where situation at work may be conducive , which would allow to acqui...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.