சத்தீஸ்கரில் கலெக்டர் கடத்தல்: நக்சல்கள் அட்டூழியம்

 

ராய்ப்பூர், ஏப்.22 (டிஎன்எஸ்)  சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் கலெக்டரின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.  கடத்தப்பட்ட கலெக்டர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர்.

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். அப்பகுதியில் நடந்த கிராம் சூரஜ் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.  சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி., அபிஷேக் சாண்டில்யா விரைந்துள்ளார்.

"கிராம சுராஜ்' என்கிற புதிய திட்டத்தின் கீழ் கிராம மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொது நிகழ்ச்சியின்போது, மாஜிபாரா என்ற அந்த கிராமத்துக்கு பைக்குகளில் வந்த 20-க்கும் மேற்பட்ட நக்சல்கள் அவருடைய 2 பாதுகாவலர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு அவரைக் கடத்திச் சென்றனர்.

மாவட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே துணிகரமாக இச் சம்பவம் நடந்துள்ளதால் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கும் தில்லிக்கும் உடனே தகவல் தரப்பட்டது.

2006-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்ற மேனன் மிகவும் துடிப்பானவர். சுக்மா என்கிற புதிய மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். தங்களுடைய செல்வாக்கு சரிந்துவிடுமோ என்று அஞ்சியும் அதிகாரிகள் யாரும் கிராம மக்களை நெருங்கக்கூடாது என்று எச்சரிக்கவும் இந்தக் கடத்தல் நடந்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் சாண்டில்யா தலைமையில் போலீஸ் படை அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையை உடனே தொடங்கியது.

அவரைக் கடத்திச் சென்றவர்கள் அதன் பிறகு அரசுடனோ பத்திரிகைகளுடனோ தொடர்பு கொள்ளவில்லை. தங்களுடைய கோரிக்கைகள் என்ன, எதற்காக ஆட்சியரைக் கடத்தினார்கள் என்று தெரிவிக்கவில்லை.

கிராம மக்கள் நக்சல் இயக்கத்தில் சேருவதையும் நக்சல்களுக்கு ஆதரவு தருவதையும் தடுப்பதற்குத்தான் இந்த கிராம சுராஜ் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது மக்களிடையே பிரபலம் ஆவதால் கோபம் அடைந்து நக்சல்கள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

முதல்வர் உறுதி:

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனனை உயிருடன் மீட்க அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் ரமண் சிங் உறுதி அளித்தார். அவர் மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோருடன் உடனடியாக இது குறித்து விவாதித்தார்.

ப சிதம்பரம் உறுதி:

ஆட்சியரை மீட்க மாநில அரசுக்குத் தேவைப்படும் எல்லாவிதமான உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்தார்.

மனைவி கோரிக்கை:

மனிதாபிமான அடிப்படையில் தனது கணவரை விடுவிக்குமாறு நக்சலைட்டுகளுக்கு ஆட்சியரின் மனைவி ஆஷா மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கணவரை விடுவிப்பதில் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனது கணவரின் உடல் நிலை சரியில்லை. மருந்துகளை அவர் எடுத்துச் செல்லவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கணவர் நேர்மையான அதிகாரி என்றும், சுக்மா மாவட்ட வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கணவருடன் மாலை 4.45 மணிக்குப் பேசியதாகவும், அதற்குப் பிறகு அவருடன் பேச முடியவில்லை என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கியப் பகுதியான சுக்மா மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு இங்கு நியமிக்கப்பட்ட முதலாவது ஆட்சியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ள இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார்.

இவரை விடுவிப்பது தொடர்பாக நக்சலைட்டுகளிடமிருந்து தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.  (டிஎன்எஸ்)

Apr 22, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.