புனே, ஏப்.24 (டிஎன்எஸ்) ஐபிஎல்-5 தொடரில், இன்று (ஏப்.24) நடைபெற்ற 31 வது போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் விளையாடின. இதில், டெல்லி டேர் டெவில்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் கேட்பன் சேவாக் அபாரமாக விளையாடி 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
டாஸ் வென்ற புனே அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி களத்தில் இறங்கிய புனே அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 146 ரன் எடுத்தது.
147 ரன் என்ற வெற்றி இலக்கைக் கொண்டு களம் இறங்கிய டெல்லி அணி, 16 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 148 ரன்களை எடுத்தது. சேவாக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து டெல்லி அணி முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. (டிஎன்எஸ்)
Apr 24, 2012
* Do not use semicolon(;)