வேல்முருகன் உள்பட தேமுதிக நிர்வாகிகள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்

 

சென்னை, ஜன.7 (டிஎன்எஸ்) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று (பிப்.7) முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
தேமுதிக மாநில தொழிற் சங்க பேரவை தலைவர் வேல்முருகன், மாநில தேர்தல் பிரிவு செயலாளர் ஜெகவீர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜெய்சன் ஜேக்கப், மருத்துவ அணிச்செயலாளர் பாரி, தொழிற்சங்கப் பொருளாளர் ரவீந்திரன், இன்ஜினீயரிங் தொழிற்சங்க செயலாளர் பொன்ராஜ், தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க செயலாளர் பிரகாசம், தொழிற்சங்கத் துணைத் தலைவர் கமலக்கண்ணன், மாநில மின்வாரிய தொழிலாளர் சங்கத் தலைவர் ரஷித், செயலாளர் இளங்கோ, அமைப்புசாரா தொழிற்சங்க செயலாளர் பெல் நடராஜா, கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜி. பாபு, நெல்லை மாவட்ட தொழிற்சங்க தலைவர் நெல்லை சுந்தரம், தர்மபுரி மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் நாகை நடராஜன், தஞ்சை மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் வடசேரி பாஸ்கர், வடசென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். செல்வராஜ், பெரம் பூர் பகுதி மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோபால் உள்பட தே.மு.தி.க.வை சேர்ந்த ஆயிரம் பேர் அதிமுக-வில் இணைந்தனர்.
 
தேமுதிக-வில் இருந்து விலகி இன்று அதிமுக-வில் இணைந்த வேல்முருகன் உள்ளாட்சி மன்ற தேர்தலில் சென்னை மேயர் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் அமுதா, மாரியம்மாள், கருப்பசாமி, ம.தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் தங்கசாமி, பால்ராஜ், வெள்ளைத்தாய், விஜயா வெங்கடாச்சலம், அழகர்சாமி, ராஜாராம், இந்திய கம்யூனிஸ்டைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர்.
 
சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், நடிகை குயிலி ஆகியோரும் அ.தி.மு.க. வில் சேர்ந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலா ளருமான ஜெயலலிதா உறுப்பினர் உரிமை சீட்டுக்களை வழங்கினார். முன்னதாக தலைமை கழகத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச். பாண்டியன், செயலாளர் தமிழ்மகன் உசேன், பொன்னையன், செம்மலை, தம்பித்துரை. அமைச்சர்கள் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன்,

பா. வளர்மதி, வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன், சிவபதி, கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி, சின்னையா, மாதவரம் மூர்த்தி, எம்.பி.க் கள் பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ரபி பெர்னாட், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், மாவட்ட செய லாளர்கள் கலைராஜன், செந்தமிழன், வெற்றிவேல், புரசை கிருஷ்ணன், கவுன்சிலர்கள் சிவராஜ், அலிகான் பஷீர், முகமது அலி ஜின்னா, பாண்டியன், தொழிற்சங்க செயலாளர் அர்ஜூனன், கவிஞர் வீரைகறீம், அண்ணா நகர் பாண்டுரங்கன் உள்பட பலர் வரவேற்றனர். (டிஎன்எஸ்)

Feb 07, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.