மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் : பக்தர்கள் தரிசனம்

 

மதுரை, மே 2 (டிஎன்எஸ்) மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி காலை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள், சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.

இவ்விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் பட்டாபிஷேகமும், நேற்று இரவு திக் விஜயமும் நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று (புதன்கிழமை) காலை அம்மன், சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

மணமேடை வடக்காடி, மேலஆடி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கருங்கல்லால் அமைக்கப்பட்டு 7 வித மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சரியாக 8.38 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் மேடைக்கு வந்தார். பின்னர் மீனாட்சி அம்மன் வந்தார்.

இதை தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் வந்தார். அதன்பிறகு பவளக்கனிவாய் பெருமாள் வந்தார். அதன்பிறகு 9.05 மணிக்கு மோகன், ரவிபட்டர்கள் தலைமையில் யாகம் வளர்க்கப்பட்டு மங்கல இசையுடன் பாலிகா உள்பட திருமண சடங்குகள் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சரியாக 9.40 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாங்கல்ய நாண் பூட்டினார். அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் புதிய மஞ்சள் கயிரை தங்களது கழுத்தில் சூடிக் கொண்டு சுவாமியை வணங்கினர்.

பின்னர் 10.10 மணிக்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்விழாவில் நீதிபதி சொக்கலிங்கம், கலெக்டர் சகாயம், மேயர் ராஜன் செல்லப்பா, டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி. அஸ்ராகார்க் மற்றும் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளை (வியாழக்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவினையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.