மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்தார் அஷோக் சவாண்

 

மும்பை, நவ.3 (டிஎன்எஸ்)

மகாராஷ்டிர முதலமைச்சர் அஷோக் சவாண் ஆளுநர் எஸ்.சி.ஜமீரை இன்று சந்தித்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன்  ஆளுநர் தனித்தனியே ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று 3ஆவது தடவையாக ஆட்சியைப் பிடித்தது. வழக்கம் போல காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி தேசிய வாத காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது உறுதியான போதிலும் இலாகா பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் கடந்த 2 வாரமாக மராட்டியத்தில் புதிய அரசு பதவி ஏற்காமல் உள்ளது. இந்த நிலையில் தற்போதைய அரசின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.

இனியும் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால் என்ன செய்வது என்று மகாராஷ்டிர ஆளுநர் ஜமீர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதலமைச்சர் அசோக் சவான், துணை முதலமைச்சர் சகன்புஜ்பால் இருவரையும் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்று இன்று முதலமைச்சர் அசோக் சவான் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆளுநர் ஜமீரும், முதலமைச்சர் அசோக் சவானும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இன்றே முதலமைச்சர் துணை முதலமைச்சர் மட்டுமாவது பதவி ஏற்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 MAKARAMAKARA : It would be a good day for students if they learn to look for facts in hand...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.