யாங்கூன், ஏப்.2 (டிஎன்எஸ்) மியான்மர் இடைத்தேர்தலில் பெற்றுள்ள வெற்றி புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாகும் என ஆங் சான் சூகி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சூகியின் கட்சித் தலைமையகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அவர்களிடையே சூகி பேசும்போது இவ்வாறு தெரிவித்தார். இந்த வெற்றி நமது வெற்றியல்ல, நாட்டின் அரசியல் அமைப்பில் தொடர்புகொள்ளத் தீர்மானித்துள்ள மக்களின் வெற்றி என்றார் அவர்.
நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆங்சான் சூகி கட்சி பெரும் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டிஎன்எஸ்)
Apr 02, 2012
* Do not use semicolon(;)