
சென்னை, ஏப்.10 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசு சார்பில் இந்த ஆண்டு சித்திரை திங்கள் முதல் நாளான 13.4.2012 அன்று நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார். இந்த புத்தாண்டை முன்னிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றிய அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்களுக்கு அன்றைய தினம் முதலமைச்சர் விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
பேராசிரியர் முனைவர் அ.அ. மணவாளன் அதன்ப, இந்த ஆண்டிற்கான கபிலர் விருதிற்கும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உ.வே.சா. விருதிற்கு புலவர் செ. இராசு அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழாவில் சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது, ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களுக்கு வழங்கப்படும். மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப்பதக்கம், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான தமிழ்த் தாய் விருது மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தெரிவு செய்யப்பட்டு , அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30,000 ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதமும் பரிசுகள் வழங்கப்படும். தமிழ்புத்தாண்டு தினத்தன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. (டிஎன்எஸ்)
Apr 10, 2012
* Do not use semicolon(;)