சுற்றுலா பேருந்துகள், மண் அள்ளும் எந்திரங்களுக்கு கூடுதல் வரி: பேரவையில் மசோதா தாக்கல்

 

சென்னை, ஏப்.9 (டிஎன்எஸ்) சட்டப்பேரவையில் இன்று (ஏப்.9) போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மசோதாவில் கூறி இருப்பதாவது:-
 
சுற்றுலா பஸ்கள், தனி நபர் ஊர்தியாக பயன்படுத்தும் போது ஆயுட்கால வரி விதிப்பு செய்யப்படுவதால் சுற்றுலா பேருந்துகளுக்கும் ஆயுட்கால வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருக்கை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுலா பஸ்களுக்கு காலாண்டு வரி விதிப்பதில் இடர்பாடு உள்ளது. எனவே 6 சதுர மீட்டருக்கு மேற்பட்ட தரை பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு செய்வது என்றும், ஏற்கனவே பதிவு செய்த வாகனங்களுக்கு தரை பரப்பின் அடிப்படையில் காலாண்டு வரி விதிப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
 
மண் அள்ளும் எந்திரங்கள், சாலையை செப்பனிடும் எந்திரங்கள், பளு தூக்கிகள், தளவாட வண்டிகள் ஆகியவை தற்போது அதிகரித்துள்ளன. இதற்கான ஆண்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அளவில் ஆண்டு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உரிமையாளரின் வணிகம், தொழில் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயன்பாடு (மேக்சி கேப்) அதிகரித்துள்ளதால் மற்ற வாகனங்களை விட இந்த வாகனங்களுக்கு வரி குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களை குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதி இல்லாமை என வகைப்படுத்தி இருக்கை அடிப்படையில் காலாண்டு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
உபரி பஸ்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்படும்போது தனிப்பட்ட வரி விதிக்கப்படும். தற்போது மற்ற மாநில பஸ்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரி, இங்கு வசூலிக்கப்படும் வரிக்கு சமமாக உள்ளது. நமது மாநில வாகனங்களை கணக்கிடும்போது மற்ற மாநில ஒப்பந்த ஊர்திகள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு அதிக சதவீதத்திலான வரி விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இதனால் சுற்றுலா பஸ், மேக்சிகேப், ஜே.சி.பி. வாகனங்களுக்கு வரி உயருகிறது. மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரத்திற்கு ஆண்டு வரி ரூ. 10 ஆயிரமாக உயரும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள பழைய சுற்றுலா வாகனத்திற்கு 14.5 சதவீதம் ஆயுள் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீத ஆயுட்கால வரியும் விதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் வரியும் உயருகிறது. (டிஎன்எஸ்)

Apr 09, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.