தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியது

 

சென்னை, ஏப்.23 (டிஎன்எஸ்) தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (ஏப்.23) தொடங்கியது. சென்னை நகரில் மே 1ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது.
 
இதுபற்றி தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
 
சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் சாதி மற்றும் சமூக, பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி உள்ளது. சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தினரின் படிப்பு, பொருளாதார நிலை, வீட்டு வசதி மற்றும் சாதி உள்பட 32 கேள்விகள் கேட்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வார்கள். ஜுன் மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 
 
வீடு தேடி வரும் கணக்கெடுப்பார்கள்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கணக்கெடுப்பு விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடக்க உதவிட வேண்டுகிறேன். சென்னை நகரில் மே 1ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி தொடங்க உள்ளது.
 
இந்த பணியில் வருவாய் அலுவலர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகியோர் வீடு வீடாக சென்று புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்றனர். சாதி வாரியான கணக்கெடுப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மடிக் கணினி கொடுக்கப்பட்டடுள்ளது. இந்த கணக்கெடுப்பில் 24 கேள்விகள் கேட்கப்பட்டு, கேள்விக்கான பதில்கள் உடனடியாக மடி கணியில் பதிவு செய்யப்படுகின்றன. பின்பு இதன் நகலை எடுத்து, குடும்ப தலைவரிடம் கையெப்பம் பெறப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் 40 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார். (டிஎன்எஸ்)

Apr 23, 2012

Comments


Markkam g
I disagree this one bzs community is dis continue by govt but here its enconzined
23 Apr 2012 07:34 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.