இஸ்லாமாபாத், ஏப்.26 (டிஎன்எஸ்) நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானையை குற்றவாளி என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி நசீர் உல் மல்க் தலைமையிலான 7 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் கிலானியை குற்றவாளியாக அறிவித்தாலும் சிறை தண்டனை எதுவும் வழங்கவில்லை.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்குகள் மீது மீண்டும் விசாரணை நடத்துமாறும், இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதுமாறும் பிரதமர் கிலானிக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை கிலானி பின்பற்றாததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. (டிஎன்எஸ்)
Apr 26, 2012
* Do not use semicolon(;)