மக்களவையில் அமளி : காங்., எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட்

 

புதுதில்லி, ஏப்.24 (டிஎன்எஸ்) அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.பி.,க்கள் 8 பேர் மக்களவையில் இருந்து 4 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனி தெலுங்கானா விவகாரத்தை முன் வைத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆந்திர பிரதேசத்தின் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

டி.ஆர்.எஸ்., எம்.பி.,கள் 4 பேரையும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசித்தார். இதில் முலாயம் சிங், சரத் யாதவ், குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும்வரை அமளியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்தது. ஆனால் அடையாள தண்டனையாக 4 நாட்களுக்கு மட்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது. இதை சமாஜவாதி, ஐக்கிய ஜனதாதளம், அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்தனர். பின்னர் பாஜகவும் ஆதரித்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்கள் 8 பேரும் 4 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். (டிஎன்எஸ்)

Apr 24, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.