செ‌ன்னை‌யி‌ல் மழைகால ‌சிற‌ப்பு மரு‌த்துவ முகா‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்

 
 செ‌ன்னை‌யி‌ல் மழைகால ‌சிற‌ப்பு மரு‌த்துவ முகா‌ம்: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்

செ‌ன்னை, நவ.7 (டிஎன்எஸ்)
 
சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது எ‌ன்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று தே‌ங்‌கி ‌கிட‌ந்த மழை ‌நீ‌ரை பா‌ர்வை‌யி‌ட்டு பணிகளை துரிதப்படுத்திய பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மு.க.ஸ்டாலின், சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெ‌ய்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலநிலையில் 40 செ.மீட்டராக இருந்த மழை அளவு, தற்போது 30 செ.மீட்டர் அளவில்தான் உள்ளது.

மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 3 ஆண்டுகளில் 149.58 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ. 81 கோடியே 76 லட்சம் செலவில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டியுள்ளது. அதே போன்று 996 கி.மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

இதனால் தென்சென்னை பகுதிகளான தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலை, சாந்தோம், வேளச்சேரி, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவது கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது.

வட சென்னை பகுதியில் வியாசார்பாடி, கணேஷ்புரம், புளியந்தோப்பு, ஓட்டேரி இடங்களிலும், சுரங்கப்பாதைகளிலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கத்தை மோட்டா‌ர் பம்புகள் மூலம் வெளியேற்றம் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வரை முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கும் நிலை உருவாகவில்லை. இருப்பினும் மாநகராட்சி முகாம்களில் பொது மக்கள் தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான உணவு வழங்க தயார் நிலையில் மாநகராட்சி உள்ளது.

சென்னையில் 10 மண்டலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோயினை தடுப்பதற்கு சிறப்பு மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது எ‌ன்று மு.க‌.‌ஸ்ட‌ா‌லி‌ன் கூறினார்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 VRICHIKAVRICHIKA : If you have your strategy as a mix of prudence and practical approach then ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.