மெரீனாவில் கிரிக்கெட் விளையாட மாற்று இட‌ம் ஏற்பாடு: மேயர்

 
 மெரீனாவில் கிரிக்கெட் விளையாட மாற்று இட‌ம் ஏற்பாடு: மேயர்

சென்னை, நவ.3 (டிஎன்எஸ்)
 
செ‌ன்னை மெ‌ரீனா‌வி‌ல் ‌‌கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையாட மா‌ற்று இட‌ம் ஏ‌ற்பாடு செ‌ய்து கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌‌ம் கூ‌றினா‌ர்.

திருவல்லிக்கேணி மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 91ஆவது வார்டு பொதுமக்களுக்கு வ‌ண்ண‌த் தொலை‌க்க‌ா‌ட்‌சி பெ‌‌ட்டிகளை வழ‌ங்‌கி செ‌ன்னை மேய‌ர் மா.சு‌ப்‌பிரம‌ணிய‌ம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 நபர்களுக்கு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இதுவரை 85 இலட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 19 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

செ‌ன்னை மெ‌ரீனா கடற்கரை மணற்பரப்பு உலகிலேயே 2ஆவது அதிக மணற்பரப்பை கொண்ட கடற்கரையாகும். கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகம் எதிரில் பூங்கா, மெ‌ரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை ஆகியவை ரூபாய் 40 கோடி செலவில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

மெ‌ரீனா கடற்கரையில் பொதுமக்கள் அமர்வதற்காக 14 இடங்களில் கிரானைட் கற்கள் கொண்டு அமர்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய புல்தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அழகிய நடை பாதைகள் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மெ‌ரீனா கடற்கரை சுமார் ரூபாய் 17.17 கோடியில் அழகுபடுத்தும் பணி நடைபெறுகிறது. மேலும் ரூ.3.89 கோடியில் 447 அழகிய அலங்கார விளக்குகளும் அமை‌க்க‌ப்பட உ‌ள்ளது.

மெ‌ரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில் 100 முதல் 200 இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் விளையாடுவதற்காக மாநகராட்சி மூலம் ஏராளமான விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. கிரிக்கெட் விளையாடும் போது மின் விளக்குகள், புல் தரைகள் சேதமடைகின்றன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.

இளைஞர்கள் வேண்டும் என்றே சேதப்படுத்துவதில்லை. ஆனால் விளையாடும் போது சேதப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கோடி கணக்கில் செலவிட்டு அழகுபடுத்தப்பட்டுள்ள மெ‌ரீனாவை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை ஆகும். இளைஞர்கள் விளையாடுவதால் கடற்கரை அழகு பாழ்படுத்தப்படுவது ஏற்புடையது அல்ல.

இளைஞர்களின் பிரச்சனையை அ‌றிந்த முதலமைச்சர் கருணாநிதி இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளார். தலைமை செயலர் தலைமையில் இன்று மாலையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணைய‌ர், காவ‌ல்துறை ஆணைய‌ர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இளைஞர்கள் விளையாட மாற்று ஏற்பாடு பற்றி இந்த கூட்டத்தில் பரிசீலித்து முடிவு செய்வார்கள்.

இவ்வாறு மேய‌ர் சு‌ப்‌பிரமண‌ிய‌ன் கூ‌றினா‌ர்.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments


thirumurthy
action mayor!
03 Nov 2009 06:29 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 DHANUSDHANUS : A normal day. Keep you ego aside. Be more willing to listen to people who c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.