திருச்சி, எப்.2 (டிஎன்எஸ்) கே என் நேருவுக்கு போன் மூலம் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இது சம்பந்தமாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை மதுரையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29ஆம் தேதி தில்லைநகரில் மர்ம ஆசாமிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்று வீசிய கூலிப்படையையும், ஏவிய முக்கிய பிரமுகரையும் தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கே என் நேருவுக்கு போன் மூலம் சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனிபடை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சங்கரன்கோயில், விருதுநகரைச் சேர்ந்த கந்தசாமி, சண்முகம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மதுரையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். (டிஎன்எஸ்)
Apr 02, 2012
* Do not use semicolon(;)