சபரிமலை, ஏப்.15 (டிஎன்எஸ்) பிரபல கர்நாடக இசைக்கலைஞர் ஜேசுதாசுக்கு 'அரிவராசனம்' விருது வழங்கி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவுரவித்தது.
சபரிமலை ஐயப்பன் பாடல்களில் ஜேசுதாஸ் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. காலையில் இவரது "சுப்ரபாதம்' பாடல் கேட்டே துயில் எழும் சபரிமலை, இரவில் 'அரிவராசனம்' பாடல் கேட்டு தான் துயில் கொள்ளும். இதுபோல குருவாயூரப்பன் பற்றியும் பல பாடல்ளை ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
அவரது 50 ஆண்டு கால இசைத்துறை சேவை நிறைவையொட்டி, அவருக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் சபரிமலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் அவருக்கு 'அரிவராசனம்' விருதை, கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவக்குமார் வழங்கி கவுரவித்தார். தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன்நாயர், சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்டோ ர் விழாவில் கலந்து கலந்து கொண்டனர். (டிஎன்எஸ்)
Apr 15, 2012
* Do not use semicolon(;)