புதுதில்லி, ஏப்.30 (டிஎன்எஸ்) பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ இந்தியாவுக்கு இன்று (ஏப்.30) வருகிறார்.
பிரிட்டிஷ் ராணி எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரது சார்பில் இளவரசர் ஆண்ட்ரூ இந்தியாவுக்கு வருகிறார்.
ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கவிருக்கும் அவர், மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆகிய இடங்களுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்தியாவுடன் பாதுகாப்பு, வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுகளிலும் அவர் பங்கேற்கிறார். இந்திய அரசியல் தலைவர்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார் என்று இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள, 2-ம் உலகப் போரில் உயிரிழந்தோர் நினைவிடத்துக்குச் செல்லும் இளவரசர் ஆண்ட்ரூ, பின்னர் தேவாலயத்துக்கும், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்கிறார். (டிஎன்எஸ்)
Apr 30, 2012
* Do not use semicolon(;)