சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
முதலமைச்சர் கருணாநிதியை இன்று உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் ராபர்டோ ஜகா மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன், உலக வங்கியின் இந்தியாவிற்கான ஆலோசகர் ரஷீத் பென்மசூத் ஆகியோர் உடனிருந்தனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)