தஞ்சாவூர். ஏப்.25 (டிஎன்எஸ்) அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் திவாகரனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையை சேதப்படுத்தி ஆற்று மணல் அள்ளியதாகவும், அதுகுறித்து தட்டிக்கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அரசு அதிகாரி முத்துமணி பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், திவாகரன் மற்றும் கார்த்திகேயன் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திவாகரன் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி (முழுபொறுப்பு) தங்கராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திவாகரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல், இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கார்த்திக்கேயன் செய்திருந்த மனுவையும் நீதிபதி தங்கராஜ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். (டிஎன்எஸ்)
Apr 25, 2012
* Do not use semicolon(;)