இஸ்லாமாபாத், நவ.6 (டிஎன்எஸ்)
தனது நாட்டு எல்லைக்குள் அனுமதியில்லாமல் நுழைந்ததாகக் கூறி 13 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது. மேலும் அவர்கள் பயணம் செய்த 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குட்பட்ட பகுதிக்குள் மூன்று படகுகளில் வந்த 13 மீனவர்கள் கடலோர பாதுகாப்பு ஏஜென்சியினரால் (MSA) கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் அடையாளங்கள் மற்றும் பாகிஸ்தான் நீர்ப் பகுதிக்குள் வந்ததன் நோக்கம் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)