வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

 

தியோபந்த், நவ.3 (டிஎன்எஸ்)
 
இஸ்லாமுக்கு எதிரான கருத்து இருப்பதாக கூறி, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
உத்தரபிரதேசம் மாநிலம் தியோபந்த் நகரில் ஜமாத் -இ- உலேமா ஹிந்த் என்ற அமைப்பின் சார்பில் தேசிய முஸ்லிம்கள் மாநாடு நடந்து வருகிறது.
 
நேற்று இந்த மாநாடு தொடங்கியது. இன்று 2ஆவது நாள் மாநாடு நடந்தது. இதில் 10 ஆயிரம் முஸ்லிம் மத தலைவர்கள் பல்வேறு துறை பிரதிநிதிகள் மற்றும் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தேச பக்தி பாடலான வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலில் ஒரு சில வரிகள் இஸ்லாமுக்கு எதிராக இருக்கின்றன. எனவே இந்த பாடலை முஸ்லிம்கள் பாடவேண்டாம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
 
மாநாட்டில் பேசிய பலரும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறினார்கள். இதில் கலந்து கொண்ட மாநிலங்களவை எம்.பி. மெகமூத் பதானியும் எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.
 
அடுத்ததாக வந்தே மாதரம் பாடலுக்கு முஸ்லிம் மத முறைப்படி தடைவிதிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வந்தே மாதரம் பாடல் பாடப்படும் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் பெற்றோர்களை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments


Patriot
Which Nation they consider as their Motherland? If they consider it is India, then they have no right to say what they say. If they consider otherwise, they are free to choose their Motherland and go there. The freedom, rights, benefits and facilities they enjoy they cannot get even in Muslim countries.
05 Nov 2009 05:16 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தேசியம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 MEENAMEENA : Want to have peace in domestic front? Then remember the simple rule, that c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.