பாக். ராணுவ தலைமையகம் அருகே தற்கொலை தாக்குதல்; 24 பேர் பலி

 
 பாக். ராணுவ தலைமையகம் அருகே தற்கொலை தாக்குதல்; 24 பேர் பலி

இஸ்லாமாபாத், நவ.2 (டிஎன்எஸ்)

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ தலைமையகம் அருகே, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தற்கொலைத் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ராணுவத்தினர் உள்பட 24 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மால் ரோட்டில் உள்ள ஷாலிமர் என்ற ஓட்டலுக்கு வெளியே இன்று காலை 10.40 மணி அளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஓட்டல் கட்டிடத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த தற்கொலைத் தீவிரவாதியை காவல்துறையினர் தடுக்க முயற்சித்தனர். அப்போது சாலிமர் ஓட்டலின் வெளிப்புறம் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 24 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அந்த இடம் இரத்தக்காடாக மாறியது.

காயமடைந்தர்வர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

(டிஎன்எஸ்)

Nov 02, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சர்வதேசம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 DHANUSDHANUS : A normal day. Keep you ego aside. Be more willing to listen to people who c...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.