புதுதில்லி, ஏப்.17 (டிஎன்எஸ்) தில்லியில் 3 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது.5.10 மணி நிலவரப்படி வடக்கு தில்லியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளில் பாஜக 41 வார்டுகளை வென்றுள்ளது. மேலும் 20 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 20 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 7 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.தெற்கு தில்லியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளில் பாஜக 41 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 இடங்களிசுல் முன்னிலையில் உள்ளது.கிழக்கு தில்லியில் மொத்தம் 64 வார்டுகளில் பாஜக 29 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?