புதுதில்லி, ஏப்.30 (டிஎன்எஸ்) தில்லியின் புறநகரான நொய்டாவில் கடந்த 2008-ம் ஆண்டு மாணவி ஆருஷி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜும் வீட்டு மாடியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த இரட்டை கொலை நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நூபுர் தல்வார் இருவரும் பல் டாக்டர்கள் ஆவார்கள். அவர்கள் ஆருஷியை கருணைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
2008-ம் ஆண்டு மே மாதம் ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். இந்த இரட்டை கொலை தொடர்பான வழக்கு விசாரணை காசியாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
2010-ம் ஆண்டு ராஜேஷ் மீது குற்றம் சுமத்திய சி.பி.ஐ. வழக்கை முடிவுக்கு கொண்டு வர மனு செய்தது. ஆனால் சி.பி.ஐ. கோர்ட்டு அதை ஏற்காமல் ஆருஷியின் தாய் நூபுர் மீதும் குற்றம் சுமத்தி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து நூபுர் கோர்ட்டில் மனு செய்தார். இதற்கிடையே கடந்த மாதம் ஆருஷியின் தந்தை ராஜேஷ் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்த நிலையில் நூபுரை ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் நூபுர் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.
நூபுர் மனு மீதான விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய மாட்டோ ம் என்று சி.பி.ஐ.யும் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை காசியாத்பாத் நீதிமன்றத்தில் நூபுர் சரண் அடைந்தார். நூபுரை கோர்ட்டு காவலில் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து நூபுரின் வக்கீல்கள் அவரை ஜாமீனில் விடக்கோரி மனு செய்தனர். இந்த மனுவுக்கு சி.பி.ஐ. இன்றே பதில் மனுதாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு நூபுருக்கு இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும். (டிஎன்எஸ்)
Apr 30, 2012
* Do not use semicolon(;)