ரயில்களில் இண்டர்நெட் வசதி: இஸ்ரோ ஒப்புதல்

 

புதுதில்லி, மே 2 (டிஎன்எஸ்) ரயில்களில் டேட்டா கார்டு இல்லாமல் இண்டர்நெட் வசதியை உபயோகப்படுத்தும் திட்டத்தை ரயில்வே துறை தயாரித்து இஸ்ரோவின் அனுமதிக்காக வெகு காலமாக காத்திருந்தது.

இத்திட்டத்தின்படி செயற்கைகோளை பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் கே.யு பாண்டில் இருந்து கற்றைகளை பயன்படுத்தி இன்டர்நெட் வசதிக்கு பயன்படுத்தி கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சம்மதம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரயில்களில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்து இஸ்ரோ அனுமதிக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ அனுமதி கிடைத்துள்ள நிலையில் விரைவில் இதற்கான பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் இத்திட்டத்தின்படி ஹௌரா ராஜதானி ரயிலில் மூன்று பெட்டிகளில் இவ்வசதி சோதனை செய்து பார்க்கப்படவிருப்பதாகவும் தெரிவித்த அவர், இச்சேவைக்கு பயணிகளிடம் இருந்து எந்த கட்டணமும் பெறுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

இத்திட்டத்திற்கு ரூ. 6.30 கோடி அளவிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனை மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று நிறைவேற்றவிருப்பதாகவும், பயணிகள் தங்கள் மொபைல் போன் முலம் பாஸ்வேர்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதை பயன்படுத்தி இன்டர்நெட் வசதியை பயணிகள் பயன்படுத்தலாம் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும் என மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் வணிகம் செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.