புனே, ஏப்.6 (டிஎன்எஸ்) நாடு முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது. புனேயில் நாளை மறுநாள் (ஏப்.8)நடைபெறும் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
புனேயில் புதிதாக சர்வதேச தரத்தில் சுப்ரதா ராய் சஹாரா என்ற பெயரில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை புனே-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிதான் முதல் போட்டியாகும். இந்த ஐ.பி.எல்.லில் புனே அணி உள்ளூரில் விளையாடும் முதல் போட்டி என்பதால் தொடக்க விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தியா மிர்சா மற்றும் இந்தி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள். மேலும் புனே பகுதியைச் சேர்ந்த தோலக் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும், காஷ்மீர், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. (டிஎன்எஸ்)
Apr 06, 2012
* Do not use semicolon(;)