ஆரணியில் தேர் கவிழ்ந்து 5பேர் பலி - 15 பேர் படுகாயம்

 

திருவண்ணாமலை, மே 2 (டிஎன்எஸ்) ஆரணி கைலாச நாதர் கோயில் தேர் கவிழ்ந்ததில் 5 பேர் பலியானார்கள், மேலும் 15பேர் படுகாயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆரணி கோட்டை மைதானத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி உடனுரை கைலாச நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை தேரோட்டம் நேற்று (மே 1) நடைபெற்றது, இதனை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் பார்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து 60 அடி உயரம் கொண்ட தேரில் கைலாசநாதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10மணி அளவில் தொடங்கியது.

இந்த மிகப்பிரமாண்டமான இந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று வீதி உலா வந்தனர். அப்போது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மாலை 6.15 மணி அளவில் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன்சக்கரம் தனியாக கழன்று சென்று தேர் நிலை சாய்ந்தது. இதில் தேரின் அடியில் சிக்கி ஆரணி எஸ்.வி., நகரத்தை சேர்ந்த செங்கல்வராயன்(50), இவரது மகன் ராமதாஸ்(30), ஜவகர்(30), சபரி(27), மற்றும் சரவணன்(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையிலும் 25க்கும் மேற்பட்டோ ர் படுகாயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. (டிஎன்எஸ்)

May 02, 2012

Comments


c.s.kameswaran
Similar accident took place in coimbatore some years back during Koniamman car festival.Proper preventive thorough scientific check of wheels etc would prevent such fatal accidents in future. With today's tech. advancement checking would be possible.
02 May 2012 04:58 PM

salam
God is upset over Nithyananda becoming aadhinam that is why he punished
02 May 2012 02:52 PM




Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.