ஐபிஎல் : பீட்டர்சன் அதிரடி; தில்லி அணி அபார வெற்றி

 

புதுதில்லி, ஏப்.19 (டிஎன்எஸ்) தில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 5வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் சேவாக் தலைமையிலான தில்லி டேர்டெவில்ஸ் அணியும், சங்ககாரா தலைமையிலான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் விளையாடின.
 
தில்லி அணி இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திலுள்ளது. டெக்கான் அணி இதுவரை தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. எனவே இம்முறை முதலாவது வெற்றியை அடைய வேண்டும் என்ற முனைப்பில் டெக்கான் அணி களம் இறங்கியது.
 
இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி கேப்டன் சங்ககாரா தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.  சிப்லி 25 ரன்னுடனும், அங்கித் சர்மா ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தில்லி அணி தரப்பில் நதீம், மோர்கெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 
பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தில்லி டேர்டெவில்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
டெக்கான் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். ஆட்டநாயகன் விருதை கெவின் பீட்டர்சன் தட்டிச் சென்றார். (டிஎன்எஸ்)

Apr 19, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.