புதுக்கோட்டை, ஏப்.24 (டிஎன்எஸ்) புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார்.
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க., வேட்பாளர் இன்று (ஏப்.24) அறிவிக்கப்பட்டு விட்டார். இந்த தொகுதியை பொறுத்தவரை நல்ல செல்வாக்கு கொண்டவர் என்பதாலும், குறிப்பாக மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் இவரது வெற்றிக்கு பெரும் சிரமம் இருக்காது என இப்பகுதி அ.தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்- 1 ம் தேதி புதுக்கோட்டை தொகுதியின் இ.,கம்யூ., கட்சியின் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் விபத்தில் சிக்கி பலியானார். இதனையடுத்து 3 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் தேர்தல் தேதிகூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அ.தி.மு.க., தனது கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் (வயது 42 ). தற்போது புதுக்கோட்டை நகராட்சி தலைவராக உள்ளார். இவர் விஜயரெகுநாத தொண்டைமானின் மகன் ஆவார். (டிஎன்எஸ்)
Apr 24, 2012
* Do not use semicolon(;)