தைபே, ஏப்.9 (டிஎன்எஸ்) தைவானில் இன்று (ஏப்.9) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. தலைநகர் தைபேயில் இருந்து 135 கி.மீ., தூரத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வின் தாக்கமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?