
சென்னை, ஏப்.5 (டிஎன்எஸ்) ஐபிஎல் டுவென்டி-20 சீசன் 5 தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 5-வது ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டம் நேற்று (ஏப்.4) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்பஜன்சிங்கை புதிய கேப்டனாகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. .
அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 ரன்களும், பிரேவோ 19 ரன்களும், விஜய் மற்றும் பத்ரிநாத் தலா 10 ரன்களும் எடுத்தனர்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (டிஎன்எஸ்)
Apr 05, 2012
* Do not use semicolon(;)