சேலம், ஏப்.25 (டிஎன்எஸ்) சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆத்தூர் அருகே கங்கவள்ளி என்னும் இடத்தில் மழை பெய்த கொண்டிருந்தபோது சாலையில் நடந்து சென்ற ஐயாத்துரை என்ற தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.இதேபோல் தம்மம்பட்டி என்னும் இடத்தில் விவசாயியான தனபால் என்பவர் நடந்து சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். (டிஎன்எஸ்)
நீதிமன்றம் தண்டனைசஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?