வேன் கவிழ்ந்து கமாண்டோ வீரர் பலி

 

நெல்லை, ஏப்.2 (டிஎன்எஸ்) சென்னை கமாண்டோ படை போலீசார், ஒரு வாகனத்தில் கூடங்குளத்தில் இருந்து செட்டிகுளம் அணுவிஜய் நகருக்கு நேற்று சென்றபோது, வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தவேனில் பயணம் செய்தவர்களில் கமாண்டோ  போலீசார் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலை பணிகள் தொடங்கப்பட்டதை முன்னிட்டு, அணுமின் நிலைய பகுதிகள் மற்றும் பணியாளர்கள், விஞ்ஞானிகள் தங்கியுள்ள செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகர் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
பாதுகாப்பு பணியில் நெல்லை மாவட்ட போலீசார், துணை ராணுவப் படையினர், அதிரடிப் படையினர், அதிவிரைவுப் படையினர் மற்றும் சென்னை கமாண்டோ போலீஸ் படையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை கமாண்டோ படை போலீசார், ஒரு வாகனத்தில் கூடங்குளத்தில் இருந்து செட்டிகுளம் அணுவிஜய் நகருக்கு இன்று சென்றனர். அவர்கள் சென்ற வேன், செட்டிகுளம் சந்திப்பு அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
 
அதன் மீது மோதாமல் இருப்பதற்காக வேனின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தவேனில் பயணம் செய்துவந்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், கமாண்டோ போலீசார் பரமசிவம் (வயது27), மணி கண்டன், சூரிய பிரபாகர், செல்வகுமார், வேனை ஓட்டி வந்த ராமச்சந்திரன் ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.
 
அவர்களில் பரமசிவம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் பலியான பரமசிவத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும், சம்பவ இடத்திற்கு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான கமாண்டோ படை போலீஸ் காரரின் சொந்த ஊர் சாத்தான்குளம் ஆகும்.  (டிஎன்எஸ்)

Apr 02, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.