தேனி, ஏப்.25 (டிஎன்எஸ்) நாடு முழுவதும் முதற்கட்டமாக, ஆயிரம் தபால் அலுவலகங்களில் ஏ.டி.எம்., சேவை துவங்கப்பட உள்ளது.
தபால் சேவை தற்போது, வணிக ரீதியாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, அஞ்சலக கணக்குகள் வைத்திருப்போரின் நலன் கருதி வங்கிகளைப் போன்று ஏ.டி.எம்., சேவை மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஆயிரம் தலைமை தபால் நிலையங்களில், இச்சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருவதாக, தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். (டிஎன்எஸ்)
Apr 25, 2012
* Do not use semicolon(;)