மதுரை, மார்ச் 28 (டிஎன்எஸ்) மதுரை சின்னசொக்கிகுளத்தில் கட்டப்பட்டுள்ள 'விஷால் மால்' ஷாப்பிங் காம்ப்ளக்ஸை, தமிழக ஆளுநர் ரோசையா, இன்று (மார்ச் 28) பகல் 1.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இரண்டேகால் லட்சம் சதுரஅடியில், ஏழு தளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆடை, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகுசாதனங்கள், உணவகங்கள், காபி ஷாப், திரையரங்குகள் இதில் அமைந்துள்ளன.
அனைத்து தளமும் குளிரூட்டப்பட்டுள்ளதால், வியர்க்காமல், விருப்பப்பட்டதை நிதானமாக வாங்கலாம். திரையரங்கில் தீப்பிடிக்காத திரைச்சீலை, எந்தப் பக்கமும் அமர்ந்து பார்க்கும் வசதிகள் உள்ளன. ஏழாவது தளத்தை காரைக்குடி, தென்னிந்திய, வடஇந்திய, சைனீஸ், சிங்கப்பூர், தாய்லாந்து உணவகங்கள் அலங்கரிக்கின்றன. ஒட்டு மொத்த உணவின் ருசி, ஒரே தளத்தில் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் விளையாட பத்தாயிரம் சதுரஅடியில், 'டேஷிங்' கார், 'கிரிக்கெட் பவுலிங்', விளையாட்டுக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸை' சுற்றிப் பார்த்தால், சுற்றுலா தலத்திற்கு சென்ற உணர்வு ஏற்படும். (டிஎன்எஸ்)
Mar 28, 2012
* Do not use semicolon(;)