திருவண்ணாமலை, பிப்.21 (டிஎன்எஸ்) சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தின் முகப்புப் பகுதியிலிருந்து, உள் பிரகாரம் வரை தீபங்களால் அலங்கரிக்கப்பட்டன. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு நேற்று வந்திருந்தனர். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சிவராத்திரி பண்டிகையில் பங்கேற்றனர்.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை உணர்த்தும் வகையில் சிவன் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் திருவண்ணமலையில், சிவராத்திரி பண்டிகையை கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர். (டிஎன்எஸ்)
Feb 21, 2012
* Do not use semicolon(;)